"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல; நியூ.எதிரான 2வது போட்டியிலும் வென்று அசத்தியுள்ள இந்திய மகளிர் அணி.!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணியும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி 44.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஆமி சட்டெர்த்வைட் மட்டும் 71 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பிறகு களமிறங்கிய இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் 35.2 ஓவர்களிலேயே
2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி 166 ரன்கள் எடுத்தனர். முதல் போட்டியில் சதமடித்த(105 ) ஸ்மிருதி மந்தனா இந்தப் போட்டியிலும் சிறப்பாக பேட் செய்து 90 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் மிதாலி ராஜ் 63 ( நாட் அவுட்) ரன்கள் குவித்தார்.