பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஒரே புள்ளியில் நான்கு அணிகள்! ஐபில் புள்ளி பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம் தெரியுமா?
ஐபில் புள்ளி பட்டியலில் தற்போது ஒரே புள்ளியில் நான்கு அணிகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது.
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 36 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகளுக்கு இடையிலான போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதில், 14 புள்ளிகளை பெற்று டெல்லி அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் 12 புள்ளிகளுடன் மும்பை அணி இரண்டாவது இடத்திலும், பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. 10 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இதனை அடுத்து மீதமுள்ள நான்கு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளை பெற்று ஹைதராபாத் அணி 5 வது இடத்திலும், இதுவரை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி, தொடர் வெற்றியால் தற்போது 6 புள்ளிகளுடன் 6 வது இடத்திலும் உள்ளது.
சென்னை அணி 6 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும், ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடமான 8 வது இடத்திலும் உள்ளது.