#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை அணி தோல்விக்கு பிறகு புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம்? முழு விவரம் இதோ.
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் இருந்து தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது டெல்லி அணி. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகளுக்கு இடையிலான போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 14 புள்ளிகளுடன் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 12 புள்ளிகளுடன் மும்பை அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
9 போட்டிகள் விளையாடி 6 வெற்றி, 12 புள்ளியுடன் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுளநிலையில் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
9 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, 6 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.
இதுவரை இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று, 4 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.