#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம் தெரியுமா? முழு விவரம் இதோ!
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இதுவரை 27 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஏறக்குறைய முதல் சுற்று ஆட்டம் முடிவுபெற இருக்கும் நிலையில் ஐபில் கோப்பையை கைப்பற்ற அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை அணி முதல் இடத்திலும், அதே 10 புள்ளிகளுடன் டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
தலா 8 புள்ளிகளுடன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மூன்று மட்டும் நான்காவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ராஜஸ்தான் அணி அதே 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது. 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை அணி இந்த பட்டியலில் 7 வது இடத்திலும், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று வெறும் 2 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி 8 வது இடத்திலும் உள்ளது.