மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி வரை காத்திருந்த ஜடேஜாவிற்கு கிடைத்த அருமையான வாய்ப்பு! கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவாரா!
இந்தியா உலகக்கோப்பை அணியில் 15 வீரர்களில் ஒருவராக ஆரம்பத்திலிருந்து இடம் பிடித்தவர் ரவீந்திர ஜடேஜா. சுழற்பந்து வீச்சாளரான இவருக்கு இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே 13 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்நிலையில் இன்று தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை சாகல் மற்றும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு குலதீப் யாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா களமிறங்குகின்றனர்.
சுழற்பந்து வீச்சாளரும் இடது கை பேட்ஸ்மேனான ரவீந்திர ஜடேஜாவுக்கு கடந்த 7 போட்டிகளில் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. இந்த உலக கோப்பையில் இந்த போட்டியில் தான் முதல்முறையாக ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. ஹார்த்திக் பாண்டியாவிற்கு அடுத்தபடியாக இந்திய அணிக்கு ஒரு ஆல்-ரவுண்டராக இருந்து வருகிறார் ஜடேஜா. இந்த போட்டியில் அவர் தனது திறமையை நிரூபித்தால் இந்திய அணி நிச்சயம் அரையிறுதியில் வலிமையான அணியாக நுழையும்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரவீந்திர ஜடேஜாவை குறித்து ஒரு சில விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு ஜடேஜாவும் பதிலடி கொடுத்து இருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் தனது திறமையை நிரூபித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு மீண்டும் பதிலடி கொடுப்பாரா ஜடேஜா! பொருத்திருந்து பார்ப்போம்.