என்ன நடந்துச்சுன்னே தெரியல.. ஒன்னும் புரியல... நடுவர்களை சாடிய இந்தியாவின் வெற்றி வீராங்கனை.!



mary-kom-talk-about-coach-comments

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக்கில் பிளைவெயிட் பிரிவு முதல் சுற்றில் டோமினிகா குடியரசு வீராங்கனை மிக்லினா கார்ஸியாவுடன் நடந்த போட்டியில் 4 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில் மேரி கோம், கொலம்பியா வீராங்கனை இங்கிரிட் வெலன்சியாவை எதிர்த்து போட்டியிட்டார். அதில் முதல் சுற்றில் 4 - 1 என்ற கணக்கில் மேரி கோம் பின்தங்கினார். பின்னர் 2வது சுற்றை 3-2 என்ற கணக்கில் மேரி கோம் கைப்பற்றினார். தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி சுற்றையும் மேரி கோம் கைப்பற்றினார். 3வது சுற்றின் முடிவில் 3 - 2 என்ற கணக்கில் வென்றார். 

Mary kom

ஆனால் மேரி கோம் பெற்ற 2 சுற்றுகளின் புள்ளி வித்தியாசங்கள் 3 -2, 3 - 2 ஆகும். ஆனால் முதல் சுற்றில் கொலம்பியா வீராங்கனை வென்ற புள்ளி வித்தியாசம் 1 - 4 ஆகும். எனவே புள்ளி வித்தியாச அடிப்படையில் இந்த போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் இது மிகவும் மோசமான ஒலிம்பிக் என நடுவர்களின் முடிவை சாடியுள்ளார் மேரி கோம். 

இதுகுறித்து அவர் கூறுகையில், நடுவர்களின் மோசமான முடிவால் நான் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நடுவர்களின் முடிவை எதிரித்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. போராட்டமோ, முடிவினை எதிர்ப்பதோ கூடவே கூடாது என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள். எனவே ஒன்றும் செய்வதற்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.