மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மும்பை அணிக்கு தலைவலியாக அமைந்த அந்த 1 ரன்! 1 ரன்னில் மிஸ் ஆன சதம் மற்றும் வெற்றி!
மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த ஐபில் 13 வது சீசனின் 10 வது போட்டியில் பெங்களூரு அணி சூப்பர் ஓவர் முறையில் அசத்தல் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து பெங்களூரு அணி வீரர்கள் பாட்டிகள் மற்றும் பின்ச் இருவரும் களமிறங்கினர்.
இருவரும் மிகவும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர். பாட்டிகள் 54 ரன்களிலும், பின்ச் 52 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அணியின் கேப்டன் விராட்கோலி 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவர்களை அடுத்து விளையாடிய AB de வில்லியர்ஸ் மற்றும் துபே இருவரும் மிகவும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி வீரர்கள் ரோஹித் சர்மா,டீ காக் இருவரும் களமிறங்கினர். ஆனால் பெங்களூரு அணியின் அசத்தலான பந்து வீச்சினால் தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
மும்பை அணி வீரர் இஷான் கிஷான் ஒருபுறம் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி மும்பை அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். அவர் 99 ரன்கள் எடுத்திருந்தநிலையில் உடனா வீசிய பந்தில் பாட்டிக்களிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
99 ரன்கள் எடுத்த இஷான் கிஷான் ஒரு ரன்னில் சதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இஷான் கிஷானுடன் இணைந்து மறுபுறம் அதிரடியாக விளையாடிய பொல்லார்ட் 24 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. அதிரடியாக விளையாடிய மும்பை அணி 1 ரன்னில் தனது வெற்றியை பறிகொடுத்தது என்றே கூறலாம்.
இதனை அடுத்து சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய மும்பை அணி மிகவும் சொதப்பலாக ஆட்டத்தை தொடங்கியது. மும்பை அணி சார்ப்பாக பொல்லார்ட் மற்றும் பாண்டியா இருவரும் களமிறங்கினர். இறுதியில் 6 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் de வில்லியர்ஸ் மற்றும் கேப்டன் விராட்கோலி இருவரும் அதிரடியாக விளையாடி பெங்களூர் அணியை வெற்றிபெற செய்தனர்.
சூப்பர் ஓவரில் முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி, கடைசி ஒரு பந்தில் ஒரு ஒரு ரன் தேவை என்ற நிலையில் அணியின் கேப்டன் விராட்கோலி பவுண்டரி அடித்து பெங்களூர் அணியை வெற்றிபெற செய்தார்.
இப்படி ஒரு ரன், ஒரு பந்து என தனது வெற்றி வாய்ப்பை இழந்தது மும்பை அணி.