#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரே ஒரு சுற்றுப்பயணம்! ஒட்டுமொத்தத்தையும் இழந்து பரிதாப நிலையில் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இந்திய அணி, டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்தை தோற்கடித்தது.
அதற்க்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றிபெற்றது. இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி மீண்டும் இந்தியாவை ஓடவிட்டது நியூசிலாந்து அணி.
New Zealand sweep India 2-0!
— ICC (@ICC) March 2, 2020
It's a seven-wicket victory for the @BLACKCAPS and they take all 120 World Test Championship points!
👏 👏 👏 #NZvIND pic.twitter.com/VX9Vu6DtWs
இந்திய அணி 3வது நாள் ஆட்டத்தின் போது 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
டெஸ்ட் தொடரில் இந்தியாவை வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் 120 புள்ளிகளை பெற்று ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.