#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிகாலையில் புதிய சாதனை படைத்த புஜாரா!. அஸ்திரலிய அணி திணறல்!.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றது. இந்தநிலையில் 2 :1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் ஆடிவருகிறது.
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் நேற்று சிட்னியில் துவங்கியது. அஸ்வின் அணியில் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனையை படைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130, ஹனுமா விகாரி 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று காலையில் தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஹனுமா விகாரி 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
புஜாரா சிறப்பாக ஆடி 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் காலத்தில் உள்ளார். மேலும், இந்த தொடரில் புஜாரா இதுவரை 3 சதம், ஒரு அரைசதம் உள்பட 458 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இந்த தொடரில் அவர் 1,135 பந்துகளை சந்தித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் ஆயிரம் பந்துகளுக்கு மேல் சந்தித்த ஐந்தாவது இந்தியராக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.