மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இந்தியாவின் வெற்றிக்கு நான் அடித்த 2 சிக்சர்கள் காரணமல்ல" ரோகித் சர்மாவிற்கு என்ன ஒரு பெருந்தன்மை!
நேற்று ஹாமில்டனில் நடைபெற்ற 3 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
180 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் டெய்லர் சிக்சர் அடித்து அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார்.
பின்னர் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவை. ஆனால் அடுத்த பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழக்க சமி அடுத்தடுத்த பந்துகளை துல்லியமாக வீசி பேட்ஸ்மேன்களை தடுமாற செய்தார். கடைசி பந்திலும் டெய்லரை போல்டாக்கி ஆட்டம் டையில் முடிந்தது.
பின்னர் நடந்த சூப்பர் ஓவரிலும் கடைசி பந்து வரை மிகவும் திரில்லாக இருந்தது. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை. ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி வெற்றிபெற செய்தார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, "இந்திய அணியின் வெற்றிக்கு நான் அடித்த 2 சிக்சர்கள் காரணமல்ல. முதலில் சூப்பர் ஓவர் கிடைக்க காரணமானவர் சமி தான். தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தபோதிலும் கடைசி ஓவரில் 9 ரன்கள் கொடுக்காமல் துல்லியமாக பந்து வீசியவர் அவரே. எனவே இந்த வெற்றிக்கு முழு காரணம் சமி தான்" என கூறியுள்ளார்.