தோனி, கோலி என முன்னாள் கேப்டன்களை ஓவர் டேக் செய்து மாஸ் காட்டிய ரோஹித் சர்மா!!



Rohit Sharma

நேற்றைய ஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன் படி அந்த அணியின் தொடக்க ஜோடி பதும் நிசங்கா-குஷால் பெரோரா ஜோடி களமிறங்கியது. தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரிட் பும்ரா 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

இப்போட்டியில், 12 வது ஓவரை வீசிய சிராஜ், குஷால் மென்டிசை 17 ரன்களுக்கு வெளியேற்றினார். இதன் மூலம் 16 பந்துகளை வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சிராஜ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன் பின்னர் 13 வது ஓவரை வீசிய ஹர்டிக் பாண்டியா வெல்லாலகேவை 8 ரன்களுக்கும், 16 வது ஓவரில் மதுஷனை 1 ரன்னிலும், அடுத்த பந்தில் மதீஷா பத்திரானாவை டக்-அவுட்டிலும் வெளியேற்றினார்.

Rohit sharma

இதன் காரணமாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 51 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்டிக் பாண்டியா 3, பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து, எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷன்-சுப்மன் கில் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. அபார தாக்குதலை தொடுத்த இந்த ஜோடி முதல் 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் குவித்தது.

இறுதியில் 6.1 ஓவர்களில் 51 ரன்கள் இலக்கை எட்டிய இந்திய அணி 8 வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த நிலையில், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 3 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.