பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
அப்பப்பா.. தோனியுடன் வாழ்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உருக்கமாக மனம்திறந்த மனைவி சாக்ஷி!

இந்திய அணியில் நட்சத்திர வீரராவும், வெற்றிகரமான கேப்டனாகவும் விளங்கியவர் தோனி. ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் அவர் தற்போது சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராகவும், கேப்டனாகவும் உள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி. இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் மகளிர் தினத்தன்று நடந்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, தோனி போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் வாழ பல விஷயங்களை பொறுத்துக்கொண்டு, மாற்றிக்கொள்ள வேண்டும். ஆபீஸ் செல்பவர்களை திருமணம் செய்தாலே பல விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒரு பிரபலத்தின் மனைவியாக இருக்கும் போது எங்களுக்கென்று சுத்தமாக ப்ரைவசியே இருக்காது. எங்களை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். கேமரா முன்னர் எப்படி இருக்கிறோமோ அதனை போன்றே நிஜ வாழ்வில் இருக்கமாட்டோம். பொதுவாக வெளியே செல்லும் போது பல கருத்துக்கள் பரவும்.
நண்பர்களுடன் சேர்ந்து சென்றால் கூட தவறான கருத்துக்களை கூறுவர். அதற்கெல்லாம் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டு சகஜமாக இருக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க, கணவரால் நாட்டிற்கே பெருமை என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கும் என கூறியுள்ளார்.