#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தென் ஆப்பிரிக்காவுக்கு பேரதிர்ச்சி! உலக கோப்பை தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர்.!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவோடு இங்கிலாந்து புறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நடந்த பயிற்சி ஆட்டத்தில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதனால் நாளைய ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி நிச்சயம் வெறியுடன் விளையாடும். இந்நிலையில் அந்த அணியின் முன்னணி தொழில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பியூரன் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தோள்பட்டை காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டுவந்த டேல் ஸ்டெய்ன் உலகக்கோப்பை போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டு தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு இவருடைய அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.