பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நேற்றைய போட்டிக்கு நடுவே மோதிக்கொண்ட வீரர்கள்! இறுதி ஓவரில் நடந்த பரபரப்பு காட்சிகள்! வைரல் வீடியோ.
ஹைத்ராபாத் மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இறுதி கட்டத்தில் ராஜஸ்தான் அணி அபாரமாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் அடித்தது.
159 என்ற இலக்குடன் களமிறக்கிய ராஜாஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஹைத்ராபாத் அணி வெற்றிபெறுவது உறுதியானது. ஹைதராபாத் அணிதான் வெற்றிபெறும் என அனைவரும் நினைத்திருந்தநிலையில் ராஜஸ்தான் அணி வீரர்கள் டெவாட்டியா மற்றும் பராக் இருவரின் சிறப்பான ஆட்டத்தில் போட்டி தலைகீழாக மாறியது.
Shame khaleel show your Attitude with ball pic.twitter.com/qv1xt3NCiw
— NaresH (@NaresH___Chinna) October 11, 2020
இறுதியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெவாட்டியா மற்றும் பராக் இருவரும் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் அணியை வெற்றிபெற செய்தனர். இதனிடையே கடைசி ஓவரை வீசிய ஹைதராபாத் அணி வீரர் கலீல் அகமது மற்றும் ராஜஸ்தான் அணி வீரர் டெவாட்டியா ஆகியோருக்கு இடையில் ஏதோ மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் இருவரும் மாறி மாறி கைகளை நீட்டி கோவமாக ஏதோ பேசி கொண்டனர். நிலைமையை உணர்ந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் போட்டி நடுவர்கள் டெவாட்டியாவை சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவரின் கோவம் அடங்கவில்லை.
இறுதியில் போட்டி முடித்த பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் ஆகி தோள்மேல் கைபோட்டவாறு மைதானத்தில் இருந்து வெளியேறினர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
Tewatia was not happy with khaleel 🗣👀 #SRHvsRR #SRH pic.twitter.com/sfMuXzM4Ev
— Gautam (@Gautamgaduu) October 11, 2020
#RRvSRH Khaleel beware of Tewatia . pic.twitter.com/NPQMC42uPo
— Mukesh K yadav2830 (@Mukki2830) October 11, 2020