பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
4 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்த இந்திய அணி-இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.
அதாவது இன்று எந்த ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அதே ஓவரில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடரும். புதிதாக ஆட்டம் நடைபெறாது.இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் தொடங்கியுள்ளது ஆட்டம்.50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.
10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் முதல் ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினார்.இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.நான்காவது ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார் கேஎல் ராகுல்.
இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.