எட்டாவதாக களமிறங்கி இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் வீரர்! புதிய உலக சாதனை!



Westindies captian holder scored dobule century

சர்வதேச டெஸ்ட் போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கி இரட்டை சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 289 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனைத்தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 77 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

west indies

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஏழாவது மற்றும் மற்றும் எட்டாவது பேட்ஸ்மேன்களாக இறங்கிய டவுரிட்ஜ் சதமும் ஹோல்டர் இரட்டை சதமும் அடித்து அசத்தினார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் எட்டாவது பேட்ஸ்மேனாக இறங்கி இரட்டை சதமடித்த மூன்றாவது வீரர் என்ற ஹோல்டர் படைத்துள்ளார். இவருக்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் வாசிம் அக்ரம், இம்தாஸ் அஹ்மத் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.