#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதலிடம் பிடிக்குமா டெல்லி.. சன்ரைசர்ஸ் அணியுடன் இன்று மோதல்!
ஐபிஎல் 2020 டி20 தொடரின் 47 ஆவது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் டெல்லி கேப்பிடஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் உள்ள MI, DC மற்றும் RCB அணிகள் 14 புள்ளிகளை பெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடஸ் அணி வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும். ஆனால் முதல் பாதியில் டெல்லி அணியில் இருந்த வெற்றி வாய்ப்பு அடுத்த பாதியில் குறைந்துள்ளது.
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான கடந்த இரண்டு போட்டிகளிலும் டெல்லி கேப்பிடஸ் அணி தோல்வியை தழுவியது. மேலும் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நெருக்கடியான சூழலில் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துகொள்ள இன்றைய போட்டியில் நிச்சயம் வென்றே தீர வேண்டும் என்ற நிலையில் டெல்லி உள்ளது. ஒருவேளை தோல்வியை தழுவினால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகக்கூடும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.