கையில் சுருட்டு, கொலைவெறி பார்வை.. மிரள வைக்கும் நடிகை அனுஷ்கா.! வெளிவந்த போஸ்டர்!!
மீண்டும் மழையா! நாளையும் ஆட்டம் ரத்தானால் முடிவு என்னவாகும்?
2019 ஐசிசி உலக கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் சுற்று முற்றிலும் முடிவுற்ற நிலையில் நாளை முதலாவது அரையிறுதி போட்டி நடைபெற்ற உள்ளது.
இந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் ஆடியதற்கு பிறகு இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளவில்லை. இதற்கு காரணம் இரு அணிகளும் மோலவிருந்த ஆட்டம் மழையால் ரத்தானதால் தான்.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் அரையிறுதியில் நாளை மோதுகின்றன. ஆட்டம் நடைபெறும் மான்செஸ்டர் பகுதியில் நாளை மழை பெய்வதற்கு 50% வாய்ப்பு இருப்பதாக வாணிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் 4 ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் அணிகளுக்கு புள்ளிகள் பிரித்து கொடுக்கப்பட்டன.
ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு அவ்வாறு செய்ய முடியாது. ஒருவேளை நாளை ஆட்டம் மழையால் ரத்தானால் ரிஷர்வ் நாளான மறுநாள் ஆட்டம் நடைபெறும். ஆனால் மறுநாள் மழை பெய்ய 80% வாய்ப்பு உள்ளது. இரண்டு நாட்களுமே போட்டி நடைபெறவில்லை என்றால் லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும்.