சந்திராஷ்டமம் நாளில் கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யக்கூடாது.? ஏன் தெரியுமா.!?



Astrology beleive about chandrastamam

சந்திராஷ்டமம் என்றால் என்ன

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ஜாதகக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாள் என்பது மாறுபடும். சந்திரன் என்றால் மதி, அறிவு, தமிழ் என்ற பொருள் படும். சந்திராஷ்டமம் என்பது சந்திரன் + அஷ்டமம் என்பதாகும். சந்திராஷ்டமம் என்பது ஒவ்வொரு ராசியினருக்கும் எட்டாவது ராசியில் சந்திராஷ்டமமாக இருக்கும். 12 ராசியினருக்கும் சந்திராஷ்டமம் ஒவ்வொரு நாட்களில் வேறுபட்டு வரும்.

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம் இருப்பவர்கள் செய்யக்கூடாதவை

குறிப்பிட்ட ராசியினருக்கு அன்றைய நாள் சந்திராஷ்டமம் என்றால் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருக்கும். ஒரு நாள் மகிழ்ச்சியாகவும், ஒரு நாள் சோர்வாகவும் காணப்படுவதற்கு சந்திராஷ்டமம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சந்திராஷ்டம நாட்களில் திருமணம், வீடு குடி போவது, வேலைக்கு சேர்வது போன்ற சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: இறந்தவர்களின் படத்தை வீட்டில் இந்த திசையில் வைக்கக்கூடாது.. என்ன காரணம் தெரியுமா.!?

 

சந்திராஷ்டமம் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள்

சந்திராஷ்டம நாளில் சந்திரனின் தாக்கம் அந்த ராசியினருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய நாள் மிகவும் கெட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். எனவே சந்திராஷ்டமம் உள்ளவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது, குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு போன்றவற்றை செய்வது சந்திரனின் தாக்கத்தை குறைக்கும்.

சந்திராஷ்டமம்

குறிப்பாக சந்திராஷ்டம நாட்களில் மிகவும் பொறுமையுடன் இருப்பது அவசியம். மன உளைச்சல், வாக்குவாதம், மந்தம், சோர்வு, கோபம் போன்றவை சந்திராஷ்டம நாளில் வரும் என்பதால் மிகவும் அமைதியாக இருப்பது நல்லது. சந்திராஷ்டம நாளில் கெட்ட பலன்களை மட்டுமே கொடுக்கும் என்பது உண்மை இல்லை. இதற்கு மாறாக சந்திராஷ்டம நாளில் கடன் தொல்லை இருக்காது, தொழிலில் லாபம் கிடைக்கும்.

இதையும் படிங்க: நிறம் மாறும் கருவறை மண்.! மணலை பிரசாதமாக தரும் மர்ம கோயில்.? தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா.!?