கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சித்திரை மாத வழிபாடுகளில் முக்கியமானவை, விரத முறைகள் என்னென்ன?..!
தமிழ் நாட்காட்டியின் படி முதல் மாதமாக இருக்கும் தமிழ் சித்திரை மாதத்தில் மேற்கொள்ளப்படும் விரதங்கள் மூலமாக வாழ்க்கை வளமாகும். இதில் பரணி விரதம், சித்ரா பௌர்ணமி, சௌபாக்கிய சயன விரதம், பாபமோசனிகா ஏகாதசி போன்ற விரதமுறைகள் இருக்கின்றன.
பரணி விரதம் :
சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளில் பைரவருக்கு பூஜை செய்ய வேண்டும். தயிர் சாதம் படைத்து பைரவருக்கு விரதம் இருக்கும் பட்சத்தில் எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகள் நமக்கு செய்த தீங்கினால் அவர்களே பாதிக்கப்படுவார்கள். வாழ்வில் வளம்சேர்க்க இந்த விரதம் நல்லது.
சௌபாக்கிய சயன விரதம் :
சுக்லபட்ச திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பூஜை செய்து தர்மங்கள் செய்தால் இப்பிறவியில் வளமான வாழ்வு கிடைக்கும். அதேபோல மறுபிறவிக்கும் அவை கிடைக்கும் என்பது ஐதீகம்.
சித்ரா பௌர்ணமி :
சித்திரை மாதத்தின் முதல் பௌர்ணமியான மூத்த பௌர்ணமி சித்ரா பௌர்ணமி. அன்றைய நாளில் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகள் பிரசித்தியாக மேற்கொள்ளப்படும். பெண்கள் சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருந்தால் நல்லது. அதேபோல வாழ்வில் செய்த பாவங்களை போக்க, பாவங்கள் செய்யாமல் இனிவரும் நாட்களைக் கழிக்க, நீடித்த ஆயுள் பெற, குடும்ப வாழ்க்கை கிடைக்க சித்ரா பௌர்ணமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
பாபமோசனிகா ஏகாதசி :
சித்திரை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் மேற்கொண்டு திருமாலை வழிபட்டு வந்தால் நமது பாவங்கள் நீங்கும்.