மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமி அதிமுக பிரமுகரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மறத்தமிழர் அமைப்பு நிர்வாகிகள் உட்பட 3 பேர் போக்ஸோவில் கைது.!
9ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 ஆண்களுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி, கடந்த ஒரு மாதமாகவே தான் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறி பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். முதலில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதை பெற்றோர், சிறுமி ஒருவிதமான பயத்துடன் அணுகுவதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, சிறுவியிடம் எதற்காக பள்ளிக்கு செல்ல மறுக்கிறாய்? என கேள்வி எழுப்பிய போது, அப்பகுதியை சேர்ந்த கயல்விழி மற்றும் உமா தன்னை சிலரிடம் அழைத்து சென்று விட்டார்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்த அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் உத்தரவிட, அவர்கள் நடத்திய விசாரணையில் பேரதிர்ச்சி சம்பவம் அம்பலமானது. அதாவது, அதிமுக பரமக்குடி நகர அவைத்தலைவர் சிகாமணி, மறத்தமிழர் சேனைத்தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
சிறுமியை மேற்கூறிய கயவர்கள் 3 பேரும் சேர்ந்து பார்திபனூர் தங்கும் விடுதிக்கு கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்ந்து அவ்வப்போது அரங்கேறி வந்ததால், சிறுமி விரக்தியடைந்து செய்வதறியாது இருந்துள்ளார் என்பது அம்பலமானது.
இறுதியில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதிமுக அவைத்தலைவர் சிகாமணி உட்பட மேற்கூறிய 5 பேரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.