மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவை: உறவினர்களால் கொல்லப்பட்ட காதலன்.... காதலி எடுத்த விபரீத முடிவு.!
கோவையில் கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனை காதலியின் தந்தை மற்றும் உறவினர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற 21 வயது இளைஞர் அன்புள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். இவர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தன்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சமாதானம் ஆகி அடுத்த வருடம் திருமணம் செய்து வைப்பதாக கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை தனியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நள்ளிரவில் அவருக்கு வாழ்த்து கூற தனது நண்பர்களுடன் சென்றிருக்கிறார் பிரசாந்த். அப்போது அவர் போதையில் இருந்ததால் ஏற்பட்ட தகராறில் காதலி தனியாவின் உறவினரான விக்னேஷ் பிரசாந்தை கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனியாவின் தந்தை மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டனர்.
பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் தன் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட தன்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஒரு வாரத்திற்குள்ளே காதலன் மற்றும் காதலி இருவரும் வீழிருந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.