மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி உட்பட 28 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு கனமழையால் இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!
நவ. 11ம் தேதியான இன்று 23 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 4 காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து, நவ. 11ம் தேதியான இன்று பல மாவட்டங்களுக்கு ரெட், மஞ்சள் அலெர்ட்டுகளும் விடுக்கப்பட்டது.
தற்போது, சென்னை, பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், சேலம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை, சேலம், இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருக்கின்றனர். சிவகங்கை, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி - காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கி அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி-கல்லூரிகள் விடுமுறை விபரம் பின்வருமாறு:
புதுச்சேரி-காரைக்கால் இன்று & நாளை, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி.
பள்ளிகள் விடுமுறை விபரம் :
சிவகங்கை, நாமக்கல், கரூர், தருமபுரி, திருப்பத்தூர் (1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை).