மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு... அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே இருக்கும் செங்கரை என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை அருகே உள்ள செங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் வலப்பக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். அப்போது காலை உணவு அருந்திய மாணவர்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கே மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.