மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை விவகாரம்; குற்றவாளிகளுக்கு கைகளில் மாவுக்கட்டு.!
ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து நகை, பணம் கொள்ளையடித்த கும்பலில் இருவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் உமா சங்கர். இவர் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஆவார். சம்பவத்தன்று இவரின் மனைவி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, வீடு வாடகைக்கு கேட்பது போல வந்த 5 பேர் கும்பல், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் மனைவியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
அவரின் வீட்டில் இருந்த 40 சவரன் நகைகள், ரூ.83 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய அரும்பாக்கம் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக மணிகண்டன், துரைசிங்கம், துரைபாண்டியன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின்போது மூதாட்டியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த துரைசிங்கம், துரைபாண்டியன் ஆகியோர் தப்பி செல்ல முயன்று சுவர் ஏறி குதித்துள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும் கால் இடறி கீழே விழுந்து கை எலும்புகளை முறித்துக்கொண்டனவர். இதனால் அவர்களுக்கு கைகளில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.