மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புகார் அளித்த மனைவி.. காவல் நிலையத்திலேயே தீர்த்து கட்ட முயன்ற கணவர்... பதபதைக்க வைக்கும் சம்பவம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்தே அவரது கணவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் அவரது கணவரை படைக்க பிடித்து கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழையனூர் சாலை துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் மூர்த்தி இவரது மகன் பூபாலன் வயது 30. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மெஹருண் நிஷா என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி இவர்களுக்கிடையே பிரச்சனையை ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக மெஹருண் நிஷா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அவரை விசாரிப்பதற்காக காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அங்கு வந்த பூபாலன் தனது மனைவி வெளியே வரும்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்த முயன்றார். அப்போது சுதாகரித்துக் கொண்ட அவரது மனைவி கத்தியை கைகளால் பிடித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மகளிர் காவலர்கள் அவரது கணவர் பூபாலனை மடக்கிப் பிடித்தனர். மேலும் காயமடைந்த மெஹருண் நிஷாவை முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை முடித்த பின் காவல் நிலையம் திரும்பிய அவர் தனது கணவரின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலை அதிகாரிகள் பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.