மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாளுக்கு கெட்டுப்போன கேக்கை கொடுத்து ஏமாற்றிய கடைக்காரர்..! திறந்த பார்த்த தந்தைக்கு பேரதிர்ச்சி..! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க..!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணாபாலம் பகுதியில் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கேக், இனிப்பு மற்றும் கார வகைகள் என பல தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை நேரடியாக தயாரித்து விற்பனை செய்யப்படும் நிலையில், கோபிசெட்டிபாளையம் அவ்வையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அந்த பேக்கரியில் ரூ.750 ரூபாய்க்கு கேக் வாங்கியிருக்கிறார்.
அதிகாலை நேரத்தில் கேக்கை திறந்து வெட்ட முயற்சித்தபோது அதனுள் பூஞ்சை பிடித்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன அவர், அதனை புகைப்படமாக எடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் கடைக்குச் சென்று சோதனை நடத்தி உணவு பணியாளர்கள் சுகாதாரமற்ற முறையில் இனிப்பு மற்றும் பிற காரவகைகளை தயார் செய்வது கண்டறிந்துள்ளனர்.