மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுகவை விளாசி அனல்பறந்த பேச்சு; நடிகர் போஸ் வெங்கட் காட்டம்..! விஜய்-க்கு எதிராக குரல்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொள்கை அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கொள்கை, கோட்பாடு எதிரிகளாக பிளவுவாத அரசியல், ஊழல் போன்றவற்றை எதிர்த்து, திமுக, பாஜகவை மறைமுகமாக நகையாடி இருந்தார்.
எதிர்ப்புக்கருத்துகள்
மேலும், திராவிட அரசியல் எனும் பிம்பத்தையும் தாக்கி பேசி இருந்தார். விஜயின் பேச்சு முடிந்ததுமே திமுகவில் இருந்து நேரடி / மறைமுக எதிர்ப்புக்கருத்துகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியான விமர்சனத்தை விஜய் மற்றும் அவரின் தொண்டர்கள் எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர்.
போஸ் வெங்கட் ட்விட்
இந்நிலையில், நடிகர் போஸ் வெங்கட், "யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.." என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவின் 'C' டீம் தான் விஜயின் தவெக.. திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு.!
கங்குவா பட இசை வெளியீடு விழாவில் பேச்சு
முன்னதாக நடிகர் போஸ் வெங்கட், கங்குவா படத்தின் இசை வெளியிட்டு விழாவின்போது, நடிகர் சூர்யாவை நேரடியாக அரசியலுக்கு அழைத்து இருந்தார். மேலும், இன்னும் பல படங்கள் கொடுத்தபின், அரசியலுக்கு வருமாறும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் போஸ் வெங்கட் மிகப்பெரிய திமுக விசுவாசி, தொடர் ஆவார்.
யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁
— Bose Venkat (@DirectorBose) October 27, 2024
இதையும் படிங்க: தவெக முதல் மாநாடு.. விபத்து, மாரடைப்பில் பலியான உயிர்கள்..!