#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி எவ்வளவு நிதி உதவி செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்ற நடிகர்களில் ஒருவர். தமிழ் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துவந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்திகளில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. தமிழகத்தின் தென்மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது கஜா புயல். மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து, மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாழைமரங்கள், தென்னைமரங்கள் என அணைத்து மரங்களையும் வேரோடு புடுங்கி வீசியுள்ளது கஜா புயல்.
கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தவரை உதவி செய்துவருகின்றனர் பிரபலங்கள். முன்னதாக நடிகர் சூர்யா குடும்பம் கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 லட்சம் நிதி உதவி செய்தனர். தற்போது நடிகர் விஜய் சேதுபதி கஜாவால் பாதிக்கப்பட் மக்களுக்கு சுமார் 25 லட்சம் நிதி உதவி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.