காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
அனல்பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.! சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசு.!
தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளையொட்டி நடக்கும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு உலகின் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலால் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்தப்படுமா.? இல்லையா.? என்ற கேள்வி இருந்துவந்தது. இந்தநிலையில் சமீபத்தில் தமிழக அரசு சில புதிய கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அனுமதி கொடுத்தது.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 14-ந் தேதியும், பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுரில் மாடுபிடி வீரர்களை பதிவு செய்யும் பணி தொடங்கியது.
அலங்காநல்லூர் 655, பாலமேடு 651, அவனியாபுரம் 430 வீரர்கள் தமிழகமெங்கிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு, கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்குள்ள முத்தாலம்மன் கோவில் பீடத்தில் கால்கோள்(முகூர்த்த கால்) ஊன்றும் விழா இன்று காலை தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.