மாடிப்படியில் கால் இடறி விழுந்த விஜய் தேவரகொண்டா; ஷாக்கில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு?
அவதாரை அவதாரமாக்கிய கேமரூனுக்கு கண்டிப்பு.. இந்துமக்கள் கட்சி பகீர் குற்றச்சாட்டு..!
கிருஷ்ணரின் நீலம், ஆரிய ஆணாதிக்க சிந்தனைகளை உலகிற்கு பரப்பியதாக கண்டனம் எழுந்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகளவில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான அவதார் தி வே ஆப் வாட்டர் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள அவதார் 2ம் பாகம் வசூலை வாரி குவித்து வருகிறது.
தற்போதைய சூழலில் படங்கள் வெளியாகினால் அதற்கு அடையாளம் என்ற விஷயத்தை திணிப்பது அல்லது படத்திலேயே அடையாளம் வைப்பது பரவலாக நடந்து வருகிறது. இதற்கு வரும் எதிர்ப்புகள் படத்தை பிரபலப்படுத்தும். இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், "ஆர்ய பிராமண ஆணாதிக்க சிந்தனைகளை உலகிற்கு பரப்பியதற்காக ஜேம்ஸ் கேமரூனை இந்து மக்கள் முன்னணி கட்சி கண்டிக்கிறது.
IMK condemns James Cameron for spreading Arya Brahminical Patriarchy thoughts to the world.
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) December 19, 2022
Avatar - Sankrit name
Blue - color of Krishna
Forehead - Thiruman(namam)
Dragon - Garuda
Whale - Matchi Avatar
Elixir - Amrut pic.twitter.com/cPqdxzqaS6
அவதார் - சமஸ்கிருத பெயர்; நீலம் - கிருஷ்ணரின் நிறம்; நெற்றி - திருமண்(நாமம்); நாகம் - கருடன்; திமிங்கிலம் - மாட்சி அவதாரம்; அமுதம் - அம்ருத்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்ட பலரும் அவதாருக்கும் அடையாளம் பூசியாச்சா? விஷயம் கேமரூனுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.