மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் போகிறேன் அம்மா.!" அரளி விதையை அரைத்துக் குடிக்கும் முன் போலீஸ்காரர் எழுதிய உருக்கமான கடிதம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே ஊஞ்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான அன்புராஜ் கடந்த 2022ல் காவலராக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒரு மாத விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அன்புராஜ் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை மேற்கொண்டுள்ளார்.
அவர் உயிரிழந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து அன்புராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அன்புராஜ் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மிகவும் உருக்கமாக அன்புராஜ், "நான் போகிறேன் அம்மா.! இத்தனை நாள் உனக்காக தான் வாழ்ந்தேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்ன ஆச்சுன்னு தெரியல.
இதை உன்னிடம் யாராவது படித்துக் காட்டுவார்கள். நான் யாரிடமும் சொல்லாமல் போய்விடலாம் என நினைத்தேன் .ஆனால், அதன் பின் எல்லோரும் தப்பு தப்பாக என்னைப் பற்றி பேசுவார்கள். என் மனம் அறிந்து யாருக்கும் கெட்டது செய்ததில்லை. என் தலைக்குள் ஏதோ ஓடிக்கொண்டே இருக்கு. அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் எங்கேயும் போகவில்லை. உன் கூட தான் இருக்கிறேன் .அதற்காகத்தான் இங்கு வந்து இறக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.