பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
திருச்சியில் பரபரப்பு... அடுத்தடுத்து 8 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி... அதிர்ந்து போன மக்கள்.!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடுத்தடுத்த எட்டு வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 26 ஆவது வார்டு மஸ்தான் தெரு ராஜிவ் நகரில் உள்ள அடுத்தடுத்து எட்டு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருக்கிறது. நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து எட்டு வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஆறு வீடுகளில் திருடுவதற்கு பொருட்கள் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த சாமான்களை கலைத்து விட்டு பொருட்களை செய்தப்படுத்திவிட்டும் சென்று இருக்கின்றனர். மேலும் சுப்பிரமணி என்பவரது வீட்டில் இருந்து 6000 ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து எட்டு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.