#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா ஊரடங்கு! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!
சீனாவில் வூஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கோரதாண்டவாடி வருகிறது. மேலும் தமிழகத்திலும் 738பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல பிரபலங்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான டேனியல் மக்களுக்கு உணவு, தண்ணீர், பிஸ்கட் பாக்கெட், மாஸ்க் போன்ற அத்தியாவசியமான பொருட்களை கொடுத்து உதவி செய்துள்ளார்.
மேலும் இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் இதனை சவாலாக ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நபரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.