திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"திமுகவை அகற்ற அனைத்தையும் செய்வோம்" - பாஜக எச்.ராஜா பரபரப்பு பேச்சு.. திமுகவுக்கு ஓபன் சவால்.!
தமிழகத்திலேயே இளம் விதவைகள் அதிகம் இருக்கிறார்கள். அதற்கு காரணமான மதுபானக்கடையை அரசு மூடாமல், 500 கடைகளை கூடுதலாக திறந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் பேசினார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா மானாமதுரை நகரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை திமுக முடிவு செய்ய முடியாது.
நமது திமுக இயக்கம் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து மதுபான கடையை மூடுவதாக இருக்கும் என்று கனிமொழி கூறியிருந்தார். இன்றோ 500 மதுபான கடைகளை அதிகரித்து இருக்கிறார்கள்.
தமிழகத்திலேயே இளம் விதவைகள் அதிகளவு இருக்கின்றனர். இதற்கு முழு காரணம் மதுபான கடைகள் தான். ஆதலால், திமுகவை வேரோடு அகற்ற தேவையான அனைத்து செயலையும் பாஜக மேற்கொள்ளும்.
தமிழ்நாட்டில் தினமும் கொலை, குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை" என்று பேசினார். திமுகவை அகற்ற பாஜக அனைத்தையும் செய்யும் என்று பாஜக தரப்பில் கூறியிருப்பது அரசியல் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.