திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தில் பாஜக பிரபலங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமரவுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக முன்னிலைபெறவில்லை.
கடந்த 2014ல் நடைபெற்ற தேர்தலிலாவது கன்னியாகுமரி தொகுதியிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே பின்னடைவை தான் சந்தித்துள்ளது.
தொகுதி வாரியாக பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரத்தை இங்கே காண்போம்.
1. தமிழிசை சவுந்தரராஜன்:
இவர் துத்துக்குடி தொகுதியில் திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் மகள் கனிமொழியை எத்ரித்து போட்டியிட்டார். மாலை 8 மணி நேர நிலவரப்படி இந்த தொகுதியில் கனிமொழி 5,41,646 வாக்குகளும், அடுத்த இடத்தில் தமிழிசை 2,08,512 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
2. ஹெச்.ராஜா
இவர் சிவகங்கை தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டார். இந்த தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் 4,62,594 வாக்குகளும் ஹெச்.ராஜா 1,90,751 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
3. பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரியில் காங்கிரஸின் ஹெச். வசந்தகுமாரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 3,34,715 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.
4. சிபி. ராதாகிருஷ்ணன்
கோயம்புத்தூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிஆர். நடராஜனை எதிர்த்து போட்டியிட்ட இவர் 3,89,846 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.
5. நயினார் நாகேந்திரன்
இராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை எதிர்த்து போட்டியிட்ட இவர் 2,13,474 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடிடத்தார். நவாஸ் கனி 2,96,574 வாக்குகள் பெற்றுள்ளார்.