மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!
நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! விசாரணையில் வெளிவந்த உண்மை.!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்கள் தல அஜித்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் வெறித்தனமாக காத்திருப்பது வழக்கம்.
நடிகர் அஜித் குமார் சென்னை திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வைத்துள்ளதக காவல் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். உடனே போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று அஜித் வீட்டில் தீவிரமாக சோதனை நடத்தினர்.
போலீசார் நடத்திய சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்துத் தேடியபோது அந்த நபர் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. புவனேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரது பிரபலமானவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.