மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!! போலீசார் தீவிர சோதனை!!
தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மர்ம நபர் ஒருவர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த மர்ம நபர், முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வெடிக்க இருப்பதாகவும் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அபிராமபுரம் காவல்நிலைய போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்துவந்த காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு நடந்த தீவிர சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால், இது பொய்யான தகவல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். விடிக்குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.