மத கஜ ராஜா படத்தின் அசத்தல் கலாட்டா கிலிம்ப்ஸ்; வீடியோ உள்ளே.!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.! முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் குவிந்த அதிகாரிகள்.! சிக்கிய நபர்
மர்ம நபர் ஒருவர் முதலமைச்சர் உதவிக்கான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் வடபுறந்த வாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது .