மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏய்.. நான் தானே., ஆசையாய் பேசிய காதலன்.. மெய்மறந்த காதலி.. இறுதியில் நடந்த பயங்கரம்..!
சமூக ஊடகங்கள் மூலமாக பெண்களை ஏமாற்றிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கே.புதூரில் கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கவிபாலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது காதலாக மலர்ந்த நிலையில், இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி கேட்டதற்கு, கவிபாலன் மறுத்ததால் காவல்துறையினரிடம் மாணவி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் கவிபாலனை கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து இதேபோல் சிவகங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முகமது பைசல் என்பவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்துள்ளார்.
தற்போது முகமது பைசலும் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இளம்பெண் புகார் அளித்துள்ளார். இவர்களின் புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.