மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி!,. சடர்ன் பிரேக் போட்ட விவசாயி!.. இறுதியில் நிகழ்ந்த சோகம்..!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பங்களாப்புதூர் அருகே கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனரங்கம் (58). இவர் விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை கொங்கர்பாளையம் சமனாக்காடு பகுதியில் இருக்கும் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் வாணிபுத்தூர்- ஆயாத்தோட்டம் வழியாக வாய்க்கால் கரையினை ஓட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காட்டுப்பன்றி ஒன்று சாலையின் குறுக்கே வந்ததை கண்ட மோகனரங்கம், திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மோகனரங்கனை அந்த வழியாக வந்த சிலர் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மோகனரங்கம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை மோகனரங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.