கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து.. அந்தரத்தில் இரண்டு முறை பல்டி அடித்து நொறுங்கிய வாகனம்; பதைபதைப்பு CCTV வீடியோ வைரல்.!



Car Bike Crash CCTV Goes Viral

 

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அலட்சியமாக பயணித்தால் எந்த மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இதுவே சாட்சி.

கடந்த மார்ச் 30 ம் தேதி சி.சி.டி.வி கேமிராவில் பதிவு செய்யப்பட்ட விபத்து குறித்த காணொளிகள் வெளியாகியுள்ளன. அந்த விடீயோவில், பள்ளி வேன் ஒன்று சாலையில் திரும்பி செல்கிறது.

அப்போது, எதிர்திசையில் கார் ஒன்று வந்த நிலையில், பள்ளி வாகனத்திற்கு பின்னால் தூரத்தில் இருந்து வந்த இருசக்கர வாகன ஓட்டி, பள்ளி வாகனத்தை முந்திச்செல்ல முற்படுகிறார்.

ஆனால், அவர் கார் வருவதை கவனிக்காத காரணத்தால், எதிர்திசை சாலை வழியே பயணிக்க நினைத்து விபத்தில் சிக்குகிறார். கார் இருசக்கர வாகன ஓட்டி மீது மோதி விடுகிறது. 

accident

இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி நிலைமையை சித்தரிக்கும் திறனுடன் கீழே விழுந்து காயம் அடைகிறார். ஆனால், அவரின் வாகனம் அந்தரத்தில் இரண்டு முறை சுழன்று சாலையில் விழுகிறது. 

பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், வாகனத்தில் செல்லும்போது கவனம் எவ்வுளவு முக்கியமானது என்பதை வீடியோ உணர்த்துகிறது.