மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான வழக்கு; சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!
சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழுக் கூட்டம் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடந்தது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் இந்த பொதுக்குழுவுக்கு எதிராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஸ், வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்குகளில் பிப்ரவரி 23-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஜூலை 11 -ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த ஐகோர்ட், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் செல்லும் என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே முடிவெடுக்கும் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர்.
இந்நிலையில், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபிஸ் அணியை சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி நியமித்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கியும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.