#JustIN: மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை.!



Chengalpattu Mathuranthagam Register Office Bribery Eructation Department Raid 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுராந்தகம் சார்பதிவு எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நடக்கும் பத்திரப்பதிவு, திருமண பதிவு உட்பட பல விஷயங்களுக்காக தினமும் மக்கள் வந்து செல்வது வழக்கம். 

இதனிடையே, சார்பதிவாளர் அலுவலகத்தில் இலஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து இலஞ்ச ஒழிப்புத்துறைக்கும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்.! மூன்று வாகனங்கள் அடுத்தடுத்ததாக மோதி கோர விபத்து!!

இலஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

இதன்பேரில் தற்போது இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர் உட்பட அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதனால் மதுராந்தகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு சூழல் எழுந்துள்ளது. 

மாநில அளவில் பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் என்பது தற்போது அபரீதமாக பெருகி இருக்கிறது. அரசு ஊழியர்களும் நேரடியாக இலஞ்சம் பெற்றால் மாட்டிக்கொள்வோம் என்பதை தெரிந்து, அவர்களிடம் ஆவணங்கள் கோர வருபவர்களிn விண்ணப்பத்தை நிராகரித்து இடைத்தரகர்கள் உதவியுடன் மறைமுகமாக பணத்தை பெற்று கொள்ளை இலாபம் பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "பிறந்து 3 மணிநேரம் தான்" - பச்சிளம் குழந்தையை நடுரோட்டில் வீசிச்சென்ற அவலம்.. திருநங்கைக்கு குவியும் பாராட்டு.!