கொரோனா எதிரொலி: தனிமைப்படுத்த இடமில்லாததால் பொது மக்களிடம் உதவி கேட்கும் சென்னை மாநகராட்சி..!



Chennai corporation asked help to people for corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று 120க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தியாவில் இந்நோயால் இதுவரை 600க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Chennai corporation

மேலும் தமிழகத்தில் பல பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக தமிழகத்தில் தனிமைப்படுத்த தேவையான இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

அதன் காரணமாக சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனிமைப்படுத்த இடங்கள் அதிகம் தேவை என்பதால் பயன்படுத்தாத வீடுகள், விடுதிகள் இருந்தால் மாநகராட்சிக்கு தற்காலிகமாக கொடுத்து உதவலாம் என கேட்டு கொண்டுள்ளது.