சத்தமே இல்லாமல் குடிநீர் வரியை உயர்த்திய சென்னை மாநகராட்சி.. சோகத்தில் சென்னை மக்கள்..!



chennai-corporation-drinking-water-tax

சென்னை மாநகராட்சியில் சமீபத்தில் சொத்து வாரியானது உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குடிநீர் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, "குடிநீர் வாரியானது முந்தைய தொகையில் இருந்து 25 % முதல் 150 % வரை குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப்போல, பயன்படுத்தும் குடிநீர் அளவை பொறுத்து குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

குடிநீர் கட்டணத்தை செலுத்த மறுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும். இணைப்பை துண்டித்த பின்னர் மீண்டும் அதனை பெறுவதற்கு கூடுதல் தொகையை செலுத்தி குடிநீர் வசதி பெறவேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.