இல்லத்தரசிகளுக்கு இன்பச்செய்தி..! ஒரே நாளில் சரசரவென குறைந்தது தங்கத்தின் விலை..! உடனே போங்க அள்ளிட்டு வாங்க..!



Chennai Gold rate decreased

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

கடந்த மாதத்தின் இறுதியில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இம்மாதத்தின் முதல் நாளான ஜூன் 1-ஆம் தேதி அதிரடியாக குறைந்து காணப்படுகிறது.

மே 29ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.38,200க்கும், 30ஆம் தேதி ரூ.38,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் ஜூன் 1-ஆம் தேதியன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.37,920க்கு ஆபரணத்தங்கம் விற்பனை செய்யப்பட்டது.goldஜூன் 2-ஆம் தேதியன்று சவரனுக்கு ரூ160 அதிகரித்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை ரூ.400 ரூபாய் வரை அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,480க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.4810 விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ38,200க்கும், ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4775க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் சில்லரை விற்பனையில் வெள்ளி விலை நேற்று ரூ.68.50க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்தது ஒரு கிராம் வெள்ளி 67.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.