மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்க நகை விலை சவரனுக்கு கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
சென்னையில் மீண்டும் சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சங்ககாலம் முதல் தற்போதைய காலகட்டம் வரை பெண்கள் மிகவும் விரும்பி அணியக்கூடிய பொருட்களில் தங்கநகைகள் தான் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் முதலீடு செய்வதாக இருந்தாலும் பெண்கள் தங்கத்தில் தான் பெரும்பாலும் முதலீடு செய்வார்கள்.
ஆனால், தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் மிகவும் கவலையுடன் இருக்கின்றனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனைப் போலவே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.43 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4771-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது மட்டுமன்றி ஒரு கிராம் வெள்ளியின் விலையும், ஒரு ரூபாய் 20 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.65.40 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.