35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
மோசடி வழக்கில் சிக்கிய பெற்றோர்.. ஜாமினுக்காக மகள் செய்த கேடித்தனம்.. குடும்பமாக கம்பி என்னும் பரிதாபம்.!
ஏலச்சீட்டு மோசடி வழக்கில் கைதான தாய் - தந்தையை ஜாமினில் எடுக்க மகள் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமரிப்பித்து கைதாகியுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள கொடுங்கையூரில் வசித்து வருபவர் திவ்யா (வயது 34). இவரின் பெற்றோர் ஏலச்சீட்டு மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களை ஜாமினில் விடுதலை செய்ய கூறி சென்னை எழும்பூர் தலைமை நீதிமன்றத்தில் திவ்யா சொத்து ஆவணத்தை தாக்கல் செய்துள்ளார்.
விசாரணையில், இந்த சொத்து ஆவணங்கள் போலியானது என்பது உறுதியாகவே, திவ்யாவின் மீது நடவடிக்கை எடுக்க எழும்பூர் தலைமை நீதிமன்ற எழுத்தர் நிலவரசி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், போலியான ஆவணத்தை தாக்கல் செய்த திவ்யா மற்றும் அதனை தயாரிக்க உதவியாக இருந்த கோபால் (வயது 67) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.