மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திமுக கொடிக்கம்பம் நடமுயன்ற 21 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி பலி: சென்னையில் சோகம்.!
சென்னையில் உள்ள மணலியில், சென்னையை தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக அங்குள்ள சின்னசேக்காடு பகுதியை சேர்ந்த எல்லப்பன் (வயது 21) என்பவர், மணாலி பாடசாலை தெருவில் இருக்கும் சர்ச் அருகே திமுக கொடிக்கம்பம் நிறுவும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இரும்பு கம்பிக்கொண்டு திமுக கொடிக்கம்பம் கட்டப்பட்டதாக தெரியவரும் நிலையில், மின்சார கம்பி மீது கொடிக்கம்பிபட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் எல்லப்பன் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்கூறிய சம்பவத்தால் நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டது.